நீரிழிவு பிரச்சனையில் இருந்து விடுபட இந்த ஒரு பழம் சாப்பிட்டாலே போதும்!
இன்றைய சமூகத்தில் நாகரீகம் என்கின்ற பெயரில், தமிழ் கலாச்சாரங்கள் எல்லாம் மறைந்து மேலை நாட்டு கலாச்சாரங்கள் நமது வாழ்வை ஆக்கிரமித்துள்ளது. மேலை நாட்டு உணவு முறையால், நமது உடல் ஆரோக்கியம் பெரிதளவில் பாதிக்கப்படுகிறது.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே பாதிக்கும் ஒரு நோய் நீரிழிவு. மேலும், மிக சிறிய வயதில் உள்ளவர்கள் கூட, பெரியவர்கள் போல தெரிவதற்கேதுவாக நமது உடல் எடை அதிகரிக்கிறது.
தற்போது இந்த பதிவில் உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு பிரச்சனையில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பார்ப்போம். பப்பாளி பழம் சாப்பிடுவதால் இப்பிரச்னையில் இருந்து விடுபடலாம்.
நீரிழிவு
நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி பப்பாளி பழம் சாப்பிட்டாலே போதுமானது. இவ்வாறு சாப்பிட்டு வந்தால், இரத்தத்தில், இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, நீரிழிவு பிரச்னையில் இருந்தும் விடுதலை பெறலாம்.
உடல் எடை
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே உடல் எடைஅதிகரிப்பு தான். இப்பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது.
வீக்கம்
நமது உடலில் வீக்கம் உள்ள இடங்களில் பப்பாளி இலையை பிழிந்து, அதன் சாற்றை பூசி வந்தால் உடலில் உள்ள வீக்கங்கள் மறைந்து விடும்.
குழந்தைகளின் வளர்ச்சி
குழந்தைகளுக்கு அடிக்கடி பப்பாளி பலம் கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி சீராக அமைவதோடு, உடல் ஆரோக்கியமும் மேம்படும்.