தலை முடி மற்றும் முகத்தை அழகு படுத்த சுலபமான வழிமுறைகள்!
- தலை முடி மற்றும் முகத்தை அழகுபடுத்த சுலபமான வழிமுறைகள்.
- பீட் ரூட்டை பயன்படுத்துவதினால் பல நன்மைகள் ஏற்படுகின்றன.
பீட் ரூட்டுக்கு உடலுக்கு நன்மை தரும் பல மருத்துவ குணங்கள் உள்ளன.இந்த வகையில் பீட் ரூட் நமது தலை முடிக்கும் சருமத்திற்கும் பெரிதும் பயனளிக்கிறது.அது எவ்வாறு பயனளிக்கிறது என்பதை பின் வருமாறு காணலாம்.
தலை முடிக்கு :
- பீட் ரூட் சாற்றுடன் மருதாணி இலையையும் நெல்லிக்காயையும் அரைத்து தலை முடியில் தடவுவதினால் தலையில் உள்ள பொடுகுகள் நீங்கி தலை முடி நன்கு வளர பெருதும் பயனளிக்கிறது.
- ஒரு கப் அளவிலான பீட் ரூட்டை அரைத்து அதனுடன் ஒரு நெல்லிக்காயை அரைத்து ஒரு எலும்பிச்சை பழ சாற்றையம் 2 ஸ்பூன் தயிரையும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து அதில் கலக்கவும்.இந்த செயலை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால் தலைமுடிக்கு நல்லது.
- பின்னர் இதை பயன்படுத்திய 2 மணி நேரத்திற்கு பிறகு ஷாம்பு உதவியுடன் தலையை கழுவ வேண்டும்.தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சில நாட்களில் வித்தியாசத்தை உணரலாம்.
முகத்துக்கு :
- ஆரஞ்சு பழ தோளின் தூள் ,பயிர் வகைகள் மற்றும் கிராம்ப் பவுடர் பீட் ரூட் சாறு முதலியவற்றை கலந்து முகத்தில் தடவவும் அல்லது தினமும் பீட் ரூட் சாற்றை கொண்டு முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கிவிடும்.
- இதை தொடர்ந்து செய்வதால் முகம் மென்மையான தோற்றமளிக்கும்.