இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு! தற்கொலை குண்டுதாரி மனைவி இந்தியாவுக்கு தப்பி ஓட்டம் – இலங்கை போலீசார்

Default Image

இலங்கையில் நடைபெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், தற்கொலை குண்டுதாரி மனைவி இந்தியாவுக்கு தப்பி ஓட்டம்.

 கடந்த 2019 ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்த நிலையில், அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், குண்டுவெடிப்பு குறித்து விசாரித்த  ஜனாதிபதி, விசாரணை ஆணையத்தின் முன் சாட்சியமளித்த காவல்துறை தலைமை ஆய்வாளர் அர்ஜுனா மஹீங்கந்தா, நெகம்போவில் உள்ள செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்தில் வெடிகுண்டு வெடித்த அஸ்தி முஹம்மடு ஹஸ்தூனின் மனைவி புலஸ்தினி ராஜேந்திரன் அல்லது சாரா செப்டம்பர் 2019-ல் கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

மேலும், கொழும்பு குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் பயங்கரவாத புலனாய்வுத் துறை ஆகியோரால் விசாரிக்கப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையில் சுமார் 200 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்