சீனாவில் பயங்கரம் !நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழப்பு !பலர் படுகாயம்
சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் தென்மேற்கு மாகாணமான சிசுவானில் அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6 ஆக பதிவாகி உள்ளது.
சீனாவின் நள்ளிரவு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது.அதற்கு பின் இன்று காலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது. இதில் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்து சேதமானது.இந்த நிலநடுக்கத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 11 பேர் பலியாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது .இதனால் அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.