அந்தமான்-நிகோபார் தீவில் நிலநடுக்கம்..!
அந்தமான்-நிகோபார் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள கேம்ப்பெல் விரிகுடா அருகே நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் இரவு 8:35 மணியளவில் 63 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது.
மேலும், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும். இதற்கு முன்னதாக செப்டம்பர் 22 அன்று, ரிக்டர் அளவுகோலில் 3.9 அளவிலான நிலநடுக்கம் இந்த தீவுகளில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.