ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் நகருக்கு 33 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவு.
இன்று ஆப்கானிஸ்தானில் அதிகாலையில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, இன்று அதிகாலை 3.47 மணியளவில் ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகருக்கு மேற்கே 33 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் இதுவரை உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. முன்னதாக கடந்த சனிக்கிழமை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. அதன் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானது. அப்போது காலை 10.17 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சனிக்கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையம் பைசாபாத்தில் இருந்து 145 கி.மீ தொலைவில் பதிவாகியுள்ளது.
இருப்பினும், இந்த நிலநடுக்கத்தின் போதும் எந்தவிதமான உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை சமத்துவ நாளாக தமிழக அரசு அறிவித்து…
சென்னை : இந்த வருட ஐபிஎல் தொடரில் அதளபாதாளத்தில் இருந்த அணிகள் தற்போது கம்பேக் வெற்றியை பதிவு செய்ய ஆரம்பித்துவிட்டன.…
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் ஏ.ஆர்.ரகுமான். இவரது இசைக்கு மொழிகள் கடந்து உலகம்…
சென்னை : இன்று தமிழ் மாதம் சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டு தினமாகவும் பலரால் கொண்டாடப்படுகிறது. சித்திரை முதல்…
டெல்லி : நேற்றைய (ஏப்ரல் 13) ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடின. இப்போட்டி…
ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…