பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் பயங்கர நிலநடுக்கம் ! உயிரிழப்பு 26 ஆக அதிகரிப்பு !

பாகிஸ்தான் காஷ்மீரில் உள்ள மீர்பூர் பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நில நடுக்கம் 5.8 ரிக்டர் அளவு பதியப்பட்டுருந்தது.
இதனால் மிக பெரிய பாதிப்பு ஆக்ரமிப்பு காஷ்மீரின் மீர்பூர் பகுதியில் மிக பெரிய சேதம் ஏற்பட்டிருந்தது.சாலைகள் மற்றும் கட்டிடங்கள் மிகவும் சேதம் அடைந்தது.மேலும் இந்த இடிபாடுகளில் பலர் சிக்கி தவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியில் இது வரை குழந்தைகள் உட்பட உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 300 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் இந்தியாவின் டெல்லி ,பஞ்சாப் ,ஹரியானா முதலிய இடங்களில் உணரப்பட்டதாகவும் மேலும் பாகிஸ்தானில் ராவல் பிண்டி , லாகூர் ,இஷ்லாமாபாத் ,பெஷாவர் முதலிய இடங்களில் உணரப்பட்டது.