பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லமாபாத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.52 மணியளவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளிவரவில்லை.