ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம்..!

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் நாட்டில் ஹிமோகிடா என்ற பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் மையம் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டுள்ளது. மேலும், ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த நிலநடுக்கம் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாத காரணத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.