இந்தோனோசியாவில் நிலநடுக்கம்…தொடர் பீதியில் மக்கள்…!!
இந்தோனோசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சும்பவா தீவில் இன்று தீடிரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது.தீடிரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கே இருந்த கட்டிடங்கள் அதிர்ந்தன.இதையடுத்து மக்கள் பீதியடைந்து கட்டிடத்தை விட்டு பாதுகாப்பு கருதி வெளியேறினர்.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து அதிகாரபூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.அதே போல நிலநடுக்கத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி_யால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தது குறிப்பிடதக்கது.