ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!
ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இன்று காலை 8 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்குள்ள இந்துகுஷ் மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக ஆப்கானிஸ்தான் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையம் தலைநகர் காபுலில் இருந்து 316 கி.மீ. தெற்கில் அமைத்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.