ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்..!
இன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
இன்று அதிகாலை 5.31 மணியளவில் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள காபூலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 22 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டுள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகியுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.