இந்தோனேசியாவை தாக்கிய நிலநடுக்கம் மற்றும் சுனாமி….!50 பேர் பலி..!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவு கோலில் 7.5 ஆக பதிவாகியுள்ளது.இந்நிலையில் இந்தோனேசியாவில் சுலவேசி தீவுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.இதன்பின் நேற்று சுலவேசி தீவை சக்தி வாய்ந்த சுனாமி தாக்கியது.அதிலும் குறிப்பாக பாலு மற்றும் டோங்க்லா பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆழிப்பேரலைகள் 6 அடி உயரத்திற்கு எழுந்த நிலையில் கடலோர பகுதிகளை முழுவதும் சூறையாடியது.
மேலும் மருத்துவமனை ஒன்று இடிந்து தரைமட்டமானது.இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 30 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.