இந்தோனேஷியாவில் மீண்டும் 2 முறை நிலநடுக்கம்..!உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரிப்பு ..!
இந்தோனேசியாவில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி தாக்கியது.
இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்கை முடங்கி முழுவதும் பாதிக்கப்பட்டது. உயிர் சேதம் அதிகரிக்கும் என்ற அடிப்படையிலே எண்ணிக்கை அறிவித்து வந்தனர்.இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,234 ஆக அதிகரித்துள்ளது.மின்சாரம் , தொலைத்தொடர்பு வசதியின்மை காரணமாக மீட்பு பனி தாமதம் என்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.9-ஆக பதிவானது. இதைத்தொடர்ந்து அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அதே பகுதியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.