#Earth Quake : ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…! சுனாமி எச்சரிக்கை விடுப்பு…!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
ஜப்பானின் டோக்கியோ நகரில் வடகிழக்கு கடலோர பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜப்பானின் டோக்கியோ நகரில் வடகிழக்கு கடலோர பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஜப்பானின் கிழக்குக் கடலோரப் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் பொருள் சேதங்கள் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் ஜப்பான் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மையப்புள்ளி அருகேதான், 2011-ஆம் ஆண்டு மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், வடகிழக்கு ஜப்பானில் உள்ள டோஹோகு பகுதியில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.