மக்கள் உயிரை பாதுகாகக்க சாலையை சீர்படுத்திடுக என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) போராடினால் சட்டவிரோதமாம் போலீசார் கைது…!
மக்கள் உயிரை பாதுகாகக்க சாலையை சீர்படுத்திடுக என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) போராடினால் சட்டவிரோதமாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி முல்லைவாடி பகுதி உள்ள கல்லாநத்தம் பிரதான சாலையை சீர்செய்ய வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் DYFIன் சார்பில் “நாத்து நடும்” போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு DYFI தாலூகா செயலாளர் S. பிரபு தலைமை தாங்கினார். தி.மு.க மாவட்ட இலக்கிய அணி செயலளார் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார். போராட்டத்தை வாழ்த்தி DYFI Ex.மாவட்ட தலைவர் A.முருகேசன், வி.தொ.ச தாலூகா தலைவர் இல.கலைமணி, தாலூகா செயலாளர் அழகுதுரை, கிருஷ்ணன், முல்லை முருகன் உள்ளிட்ட 10 பெண்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தை சட்டவிரோதம் எனக்கூறி ஆத்தூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.