நீட் தேர்வுக்கு எதிராக போராடிய போராளி அனிதாவிற்கு நீதி கேட்டு தூத்துக்குடியில் DYFI சார்பில் போராட்டம் மற்றும் கண்ணீர் அஞ்சலி..
நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை, மாணவர் விரோத மத்திய மாநில அரசுகள் செய்திருக்கும் இந்தப் படுகொலையை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது . இறந்த மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு DYFI மற்றும் SFI ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது .நீட் தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை அவர்கள் கல்வி உரிமையைப் பாதிக்கும் என தொடர்ந்து போராடி வரும் நமக்கு இந்த மரணம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில் இம்மரணத்திற்கு நீதி கேட்டும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் மற்றும் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதன் ஒரு எதிர்ப்பு குரல் துத்துக்குடி மாநகர dyfi சார்பில் கண்ணீர் அஞ்சலி மற்றும் கண்டன ஆர்பாட்டம் மாநகர தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் நீட் தேர்வு குறித்தும் ,மாணவி அனிதாவின் மரணம் குறித்தும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் முத்து,வங்கி ஊழியர் சம்மெளனத்தின் மாவட்ட செயலாளர் அண்டோ கில்பட்,dyfiயின் முன்னால் மாநகர தலைவர் ஆறுமுகம்,இந்திய மாணவர் சங்கம் சார்பில் சுரேஷ் ஆகியோர் விளக்கி பேசினர். இதில் மாநகர செயலாளர் கண்ணன் மற்றும் dyfi மாநகர குழு தோழர்கள் திலிப்,காஸ்ட்ரோ,அருண்,உட்பட பலர் கலந்துகொண்டனர்.