கொரோனா பரிசோதனைக்கு தேனீக்களை பயிற்றுவிக்கும் டச்சு ஆராய்ச்சியாளர்கள்….!

Default Image

கொரோனா பரிசோதனைக்கு தேனீக்களை பயிற்றுவிக்கும் டச்சு ஆராய்ச்சியாளர்கள்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்கான புதிய, புதிய வழிமுறைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து வருகின்றனர்.

வாகனிங்கன் பல்கலைக்கழகத்தின் உயிர் கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள், கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மாதிரிகளை காட்டியபின் தேனீக்களுக்கு சர்க்கரை நீரை வெகுமதியாக வழங்குகின்றனர். நோய் தொற்று இல்லாத மாதிரியை காட்டிய பின்னர் அவைகளுக்கு எந்த வெகுமதியும் தேனீக்களுக்கு எந்த வெகுமதியும் கொடுப்பதில்லை.

இந்த செய்முறையில் பழகிய தேனீக்கள் பாதிக்கப்பட்ட மாதிரியை வழங்கும்போது  வெகுமதியை பெறுவதற்காக தேனீக்கள் தன்னிச்சையாக தங்களது  நாக்குகளை  நீட்டுவதாக வைராலஜி பேராசிரியர்கள் விம் வான் டெர் போயல் கூறுகிறார். மேலும் நாங்கள் ஒரு தேனீ வளர்ப்பு இடமிருந்து சாதாரண தேனீக்களை சேகரிக்கிறோம். ஒரு நேர்மறையான மாதிரியை வழங்கிய உடனேயே நாங்கள் அவற்றிற்கு சர்க்கரை நீரை வழங்குகிறோம்.

தேனீக்கள் என்ன செய்கின்றன என்றால், அவை சர்க்கரை நீரை எடுக்க தங்கள்  புரோபோஸ்கிஸை நீட்டிக்கின்றன. தேனீக்களின் வைக்கோல் போன்ற நாக்குகளை குடிக்கநீட்டுவதன் மூலம், ஒரு நேர்மறையான கொரோனா வைரஸ் சோதனை முடிவை உறுதிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தேனீக்களிடம் இருந்து குரானா வைரஸ் பரிசோதனை செய்த முடிவுகளை பெற சில மணி நேரங்கள் அல்லது ஒரு நாட்கள் ஆகலாம். இந்த முறையும் மலிவானது.  இந்த சோதனைகளை சோதனைகள் பற்றாக்குறை உள்ள நாடுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்