சீனாவில் 300 அடிகளுக்கு மேல் எழுந்த புழுதிப்புயல்..!வைரலாகும் வீடியோ..!
சீனாவில் 300 அடிகளுக்கு மேல் புழுதிப்புயல் எழுந்துள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள டன்ஹூவாங் நகரத்தில் நேற்று பயங்கரமான புழுதிப்புயல் ஏற்பட்டுள்ளது. இந்த நகரம் வடமேற்கு மாகாணமான கன்சு என்ற இடத்தில் உள்ள கோபி பாலைவன எல்லையில் அமைந்துள்ளது.
சுமார் 5 முதல் 6 நிமிடங்கள் அந்த நகரத்தில் 300 அடி உயரத்திற்கு புழுதிப்புயல் வீசியுள்ளது. இதனால் அச்சமடைந்த மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், இந்த புழுதிப்புயல் மேலெழும்பி வீசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
สะพรึง ???? คลิปนาทีพายุทรายพัดถล่มนครตุนหวงในจีน เปลี่ยนทั้งเมืองกลายเป็นสีส้ม#ไทยรัฐออนไลน์ pic.twitter.com/BeCmJSUUiz
— Thairath_News (@Thairath_News) July 27, 2021