288 நாட்கள் தனது கொள்கைக்காக பட்டினி போராட்டம் நடத்தி மரணத்தை சந்தித்த புரட்சி பெண்.!
துருக்கி நாட்டில் தனது கொள்கைக்காக 288 நாட்கள் பட்டினி போராட்டம் நடத்தி கடைசிவரை தனது கொள்கையில் நிலைத்துநின்று ஒரு வீரப்பெண்மணி மரணத்தை சந்தித்துள்ளார்.
துருக்கி நாட்டில் குரூப் யேரன் எனும் நாட்டுப்புற இசைக்குழுவை நடத்தி வந்துள்ளார் 28 வயதான ஹெலின் போலாக். அந்த இசை குழுவின் மூலம் துருக்கி அரசிற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்து வருவதாக கூறி அந்த இசைக்குழு 2016ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. மேலும் இசைக்குழுவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதனை அடுத்து ஹெலின் போலாக், கைது செய்யப்பட்ட தனது இசை குழுவினரை விடுவிக்க கோரியும், தனது இசை குழுவை மீண்டும் தொடங்கவும் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார். அவரது போராட்டத்தை பார்த்துவிட்டு, மனித உரிமை ஆணையம் ஹெலின் போலாக்கை அழைத்து பேசுமாறு துருக்கி அரசை கேட்டுக்கொண்டது.
ஆனால், துருக்கி அரசு, ஹெலின் போலாக் போராட்டத்தை கைவிட்டால் அழைத்து பேசுவோம் என கூற. மீண்டும் தனது போராட்டத்தை தொடங்கினார் ஹெலின் போலாக். அவரது போராட்டம் 288 நாட்களை கடந்த நிலையில் நேற்று அவர் தனது இன்னுரை துறந்தார். கடைசி வரை தனது கொள்கைக்காக போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார் ஹெலின் போலாக் என்பது குறிப்பிடத்தக்கது.