ரஜினியின் பேட்ட படத்தை முந்தி சாதனை படைத்த தர்பார்!
- கர்நாடகாவில் ரூ.18 கோடி வசூல் செய்துள்ளதாம்.
- தர்பார் திரைப்படம், பேட்ட திரைப்படத்தை முந்தி சாதனை.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் ரஜினிகாந்த், காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த 9-ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மடியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் பல கோடிகளை வசூல் செய்துள்ள நிலையில், கர்நாடகாவில் இப்படம், ரூ.18 கோடி வசூல் செய்துள்ளதாம்.
இதன் மூலம் ரஜினியின் தர்பார் திரைப்படம், பேட்ட திரைப்படத்தை முந்தி சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.