நீதிமன்ற தடையை மீறி இணையத்தில் வெளியான தர்பார்! அதிர்ச்சியில் படக்குழு!
- நீதிமன்ற தடையை மீறி இணையத்தில் வெளியான தர்பார் திரைப்படம்.
- அதிர்ச்சியில் படக்குழுவினர்.
இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தற்பர. இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைகடலென திரண்டு படத்தை கண்டு கழித்து வருகின்றனர். மேலும் ரஜினி ரசிகர்கள் படம் வெளியானதையொட்டி, ரசிகர்கள் பலரும் வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்தை இணையத்தில் வெளியிடுவதற்கு உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்து இருந்த நிலையில், தடையை மீறி தர்பார் படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இணையத்தில் படம் வெளியாகி உள்ளது, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.