கிறிஸ்துமஸ் விடுமுறையில் அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் ‘பாம்ப்’ சூறாவளி.! -45 டிகிரியில் உறைபனி.!
அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் தற்போது ‘பாம்ப்’ புயலால் மக்கள் வெளியில் வர முடியாமல் கிறிஸ்துமஸ் விடுமுறையை வீடுகளிலேயே கழிக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது பெரும்பாலான மக்கள் கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட முடியாமல் ‘பாம்ப்’ புயலால் (Bomb Cyclone) தவித்து வருகின்றனர். இதன் காரணமாக பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து உறைபனி கொட்டி வருகிறது.
அமெரிக்காவின் மேற்கு மாநிலமான மொன்டானாவில் நேற்று (வெள்ளி) வெப்பநிலை -45°C என பதிவானது. அதே போல , மத்திய மாநிலங்களின் வெப்பநிலையும் குறைந்துள்ளது. டெஸ் மொயின்ஸ், அயோவா போன்ற இடங்களில் -38°C வெப்பநிலை நிலவி வருகிறது.
இந்த பாம்ப் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை , பொது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், 3000 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாவும், இதுவரை இந்த புயல் காரணமாக 13 பேர் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.