கர்ணன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனுஷை பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் நேற்று முன்தினம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தை பார்த்து சில பிரபலங்கள் பாராட்டி வருகின்றார்கள். அந்த வகையில், இயக்குனர் ஆனந்த் எல் ராய் கர்ணன் படத்தை பார்த்து விட்டு ” கர்ணன் திரைப்படம், அற்புதம், புத்திசாலித்தனம் படத்தின் அனுபவத்தை இப்படித்தான் கூறமுடியும். மாரி செல்வராஜ என்ன ஒரு அற்புதமாக கதை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வரைந்திருக்கிறீர்கள் தனுஷ் நீ ஒரு நடிகர் என நான் நினைத்தேன் எனது நண்பா நீ ஒரு மந்திரவாதி என என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…