வாத்தி ரெய்டு : மாஸ்டர் படத்தின் 3வது பாடல் இன்னும் சற்று நேரத்தில் வெளியீடு.!
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி, சாந்தனு போன்ற முக்கியமான பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா நடிக்கிறார்.
Vaathi Raid! Othu! ????
Mirattal track is coming your way.
Wait till 8.30pm Maapi! #VaathiRaid #Master #MasterAudioLaunch pic.twitter.com/DJVHnZ4PWR— XB Film Creators (@XBFilmCreators) March 14, 2020
இப்படத்தில் இருந்து வெளியான குட்டி ஸ்டோரி பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதையடுத்து வெளியாகிய வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றது. தற்போது வாத்தி ரெய்டு என்ற 3வது பாடல் இன்று இரவு 8.30 மணிக்கு வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. நாளை இசை வெளியிட்டு விழா நடைபெற இருக்கும் நிலையில், மாஸ்டர் படத்தில் இருந்து 3வது பாடலை வெளியிடுவதாக மாஸ்டர் படத்தின் புது போஸ்டருடன் படக்குழு பதிவிட்டுள்ளது. இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.