துபாயில் உலகின் மிக உயரமான நட்சத்திர ஓட்டல் திறப்பு!
துபாயில் உலகின் மிக உயரமான நட்சத்திர ஓட்டல் திறக்கப்பட்டுள்ளது. கெவோரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஓட்டல், உலகின் மிக உயரமான விடுதியாக கருதப்படும் துபாயின் ஜே.டபிள்யு. மரியாட் மார்க்குஸ் விடுதியை விடவும் ஒரு மீட்டர் கூடுதலான உயரம் உடையது.
லண்டனின் பிக் பென் கடிகாரம் அல்லது பாரிசின் உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்தை விடவும் இது பலமடங்கு உயரமானது. 2008ம் ஆண்டு முதல் கட்டப்பட்டு வந்த இந்த புதிய ஓட்டல், தற்போது திறக்கப்பட்டுள்ளது.
75 மாடிகளுடன் 528 விருந்தினர் அறைகளை இது கொண்டுள்ளது. இதன் உயரம் 1,165 அடி கொண்ட மாரியட் மார்க்யூஸ் ஓட்டலை விட ஒருமீட்டர் கூடுதலானது. நீச்சல்குளம், உடற்பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இந்த சொகுசு ஓட்டலில் உள்ளன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.