2020 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் போதைப்பழக்கத்தால் 93,000 பேர் உயிரிழப்பு..!

Default Image

கடந்த ஆண்டில் அமெரிக்காவில் போதைப்பொருள் பழக்கத்தால் 93 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் என்று நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

போதைப்பொருள் நுகர்வு என்பது மிகவும் ஆபத்தான மற்றும் அச்சுறுத்தலான ஒன்று. இதனை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2020 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் அமெரிக்காவில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகி இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.  கடந்த ஆண்டு மட்டும் 93,331 பேர் போதை பொருளுக்கு அடிமையாகி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இதனால் நாடு முழுவதும் போதைப்பொருள் பயன்பாடு 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் 2019 ஆம் ஆண்டில்,  போதைப்பொருள் பயன்பாட்டால் 72,000 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்