முதல்வர் வருகையை முன்னிட்டு இந்த இரண்டு நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திருவாரூர் மற்றும் நாகைக்கு செல்ல உள்ளதால் திருச்சியில் இரண்டு நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்திலிருந்து சாலை மார்க்கமாக முதல்வர் செல்ல உள்ளார்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் 24 மற்றும் 27 தடையை மீறி ட்ரோன்கள் பறக்க விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார்.