பாக்தாத் : ஈராக்கில் உள்ள எர்பில் சர்வதேச விமான நிலையம் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக ருடவ் டிவியை மேற்கோள்காட்டி ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்புகள் ட்ரோன் அல்லது ராக்கெட் தாக்குதலால் ஏற்பட்டதா என்பது தெளிவாக இல்லை என்று ருடவ் டிவி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.
பின்னர், குர்திஸ்தான் பிராந்தியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு இயக்ககத்தை மேற்கோள் காட்டி, சனிக்கிழமை இரவு எர்பில் விமான நிலையத்தில் குறைந்தது ஒரு வெடிபொருள் நிரப்பப்பட்ட ட்ரோன் தாக்குதல் நடத்தியதற்கான தகவலை ருடவ் உறுதிப்படுத்தியுள்ளது.
விமான நிலையத்திற்கு அருகில் குறைந்தது மூன்று வெடிகுண்டுகள் வெடித்துள்ளது.இந்த தாக்குதலில் இரண்டு ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதில் ஒரு ட்ரோன் விபத்துக்குள்ளானதாகவும் மற்றொன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டுள்ளதா சேதங்கள் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரும், சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வீரருமான…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி…
சென்னை : சென்னை விமானநிலையத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…
சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…