பிரார்த்தனை கூடமாக மாறிய வாகனம் நிறுத்தும் இடம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.
இந்நிலையில், வெனிசுலாவில் கொரோனா எதிரொலியால், தேவாலயங்கள் திறக்க, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு, டிரைவ் இன் பிரார்த்னைகள் அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது.
அந்த வகையில், தேவாலயத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தை பிரார்த்தனை கூடமாக மாற்றி, அந்த இடத்தில் பிரார்த்தனை நடத்தி வருகிறார் பாதிரியார் ஜோனாதன். இந்த வாகனம் நிறுத்தும் இடத்தில், 30 கார்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால், ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட மக்கள் கூறுகையில், ஏழு மாட்டாஹங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் காரில் அமர்ந்தபடியே பிரார்த்தனையில் ஈடுபடுவது, மனநிறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.
கோவை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவையில் உள்ள குரும்பபாளையத்தில் தனியார் கல்லூரி வளாகத்தில் ஏப்ரல்…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தனது 121-வது மன் கி பாத் (Mann Ki Baat) உரையில், மியான்மரில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்கள், குற்றவாளிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பஹல்காமில்…
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…