டிரைவ் இன் பிரார்த்தனைகள்! பிரார்த்தனை கூடமாக மாறிய வாகனம் நிறுத்தும் இடம்!

Default Image

பிரார்த்தனை கூடமாக மாறிய வாகனம் நிறுத்தும் இடம்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சில நாடுகளில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சில நாடுகளில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது.

இந்நிலையில், வெனிசுலாவில் கொரோனா எதிரொலியால், தேவாலயங்கள் திறக்க, அந்நாட்டு அரசு அனுமதி வழங்கவில்லை. இதனையடுத்து, அந்நாட்டு மக்களுக்கு, டிரைவ் இன் பிரார்த்னைகள் அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலாக இருந்து வருகிறது.

அந்த வகையில், தேவாலயத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தை பிரார்த்தனை கூடமாக மாற்றி, அந்த இடத்தில் பிரார்த்தனை நடத்தி வருகிறார் பாதிரியார் ஜோனாதன். இந்த வாகனம் நிறுத்தும் இடத்தில், 30 கார்கள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால், ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பிரார்த்தனையில் கலந்து கொண்ட மக்கள் கூறுகையில், ஏழு மாட்டாஹங்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளுடன் காரில் அமர்ந்தபடியே பிரார்த்தனையில் ஈடுபடுவது, மனநிறைவாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்