காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா..!!
தண்ணீர் மிகவும் சிறப்பான ஒரு பானமாகும். இந்த தண்ணீரானது தாகத்தை தணிப்பதோடு உடலில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளுக்கு நல்ல தீர்வைத் தரும்.
*மேலும் தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை குடித்து வருவதால் பல்வேறு நோய்களில் இருந்து மீண்டுவிடலாம் . பொதுவாக உடலில் ஏற்படும் நோய்களானது வயிற்றில் தான் உண்டாகிறது. எனவே வயிற்றை சுத்தமாக வைத்துக் கொண்டால், நோய்கள் வராமல் தடுக்கலாம். அதற்கு தண்ணீர் தான் பெரிய உதவியாக இருக்கும்.
*வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் முதன்மையான நன்மை குடலானது நல்ல சுத்தமாகும். அதற்கு தண்ணீர் நச்சுக்களை வெளியேற்றிவிடும் தண்ணீரானது உடலின் தங்கியுள்ள நச்சுக்களை சிறுநீர் மூலமாக வெளியேற்றிவிடும். இதனால் உடலானது நச்சுக்களின் சுத்தமாக இருக்கும். பசியைத் தூண்டும் தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.
*தலைவலியை தடுக்கும் சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால் தலைவலி அடிக்கடி ஏற்படும். அப்படி இருப்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தாண்ணீர் குடித்து வந்தால், உடலின் நீர்ச்சத்தானது அதிகரித்து, தலைவலியானது குறையும்.
*காலையில் சாப்பிடாமல்வேலைக்கு செல்பவர்கள் தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால் இந்த அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.மேலும் மெட்டபாலிசம் அதிகரிக்கும் காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரை குடித்து வந்தால் உண்ணும் உணவானது விரைவில் செரிமானமடைந்துவிடும்.