சிறிதளவு மது அருந்தினாலும் ஆபத்து தான்.! 7 வகையான புற்றுநோய் வர வாய்ப்பு.!
மது அருந்துவதால் மனிதனுக்கு 7 வகையான புற்றுநோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது. – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை.
மது அருந்துவது என்பது எப்போதுமே உடல் நலத்திற்கு தீங்கான விஷயம் தான். அதனை தமிழக டாஸ்மாக் நிறுவனம் குறிப்பிடும் வகையில் கூட மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு என எழுதி இருக்கும். இருந்தும் சிறிதளவு மது அருந்தினால் தவறில்லை என்கிற எண்ணம் கூட பலருக்கும் இருக்கிறது.
அந்த எண்ணத்தை கூட உடைக்கும் வண்ணம் தற்போது உலக சுகாதார அமைப்பான WHO தற்போது ஓர் அதிர்ச்சி சர்வே ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது.
அதில், மது அருந்துவதால் மனிதனுக்கு தொண்டை புற்றுநோய், வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் உள்ளிட்ட 7 வகையான புற்றுநோய்கள் வர வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் சர்வே ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது.
மேலும், சிறிதளவு மது அருந்துவதால் எந்தவித பெரிய பாதிப்பில்லை என்ற பலரது எண்ணமும் பொய்யானது. ஒவ்வொரு துளி மதுவும் உயிரை பறிக்கும் அபாயம் என எச்சரிக்கை விடுத்துள்ளது உலக சுகாதார அமைப்பு.