காலை எழுந்தவுடன் இதை குடிங்க!
காலையில் எழுந்தவுடன் இதை குடித்தால் உடலுக்கு நல்லது.
காலையில் எழுந்தவுடன் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கும்.உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் ,பல் வலி ,ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.உடம்பில் ஈரப்பதத்தின் அளவு அதிகமாக இருந்தால் 10 மி.லி. எலுமிச்சை சாற்றுடன் 5 மி.லி. இஞ்சி சாற்றை சிறிது தேன் சேர்த்து சுடு நீரில் கலந்து குடித்தால் நல்லது.
காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் செய்யப்பட்ட எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் குடல் இயக்கம் சீராக இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.எலுமிச்சையானது செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரக்க உதவுகிறது.
இந்த எலுமிச்சை ஜூஸில் கனிம சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால் செரிமான பாதையில் உள்ள டாக்சின்களை எளிதாக வெளியேற்றுகிறது.
மேலும் பயணத்தின் மோது சிறுநீரக தொற்று ஏற்படாமல் தடுக்க இந்த ஜூஸை எடுத்து செல்லலாம்.இந்த எலுமிச்சை சாறு சிறுநீரை அதிகரித்து தொற்றுக்கள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
எலுமிச்சை சாற்றை தலையில் வைத்து தேய்து குளித்தால் பித்தம் மற்றும் உடல் உஷ்ணம் போன்றவை குறையும்.உடல் சீராக இயங்கும்.