வாயு தொல்லை அதிகமாக இருக்கிறதா அப்ப இந்த சூப்பை உடனே குடிங்க !
நமது உடலில் வாயு தொல்லை பல மோசமான விளைவுகளை நமது உடலில் ஏற்படுத்தி விடுகிறது. இந்த வாய்வு தொல்லையில் இருந்து விடுபட நாம் வீட்டில் இருக்க கூடிய சில பொருட்களை வைத்து எப்படி சரி செய்யலாம் என்பதை இந்த பதிப்பில் இருந்து படித்தறியலாம்.
தேவையான பொருட்கள் :
ஓமம் -2 ஸ்பூன்
சீரகம் -2 ஸ்பூன்
வெற்றிலை -4
இஞ்சி -சிறிய துண்டு
பூண்டு -4 பல்
பெருங்காயம் -சிறிதளவு
தனியா -2 ஸ்பூன்
கற்பூரவள்ளி இலை -10
உப்பு -தேவையான அளவு
நெய் -2 ஸ்பூன்
மிளகு -4
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நெய்யை ஊற்றி அதில் கற்பூரவள்ளி இலை மற்றும் வெற்றிலையை சேர்த்து வதக்கவும்.
அதற்கு பிறகு மற்றோரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து நெய் ஊற்றி அதில் சீரகம் ,வெற்றிலை ,பூண்டு ,தனியா , பெருங்காயம் ,இஞ்சி,பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.பின்பு அதில் உப்பு சேர்த்து ,வதக்கிய வெற்றிலை மற்றும் கற்பூரவள்ளி இலையை சேர்த்து நன்கு கொதிக்க விட வும்.நன்கு கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும். இப்போது சூடான சுவையான மூலிகை சூப் ரெடி.