கடுமையான இடுப்பு வலியா அப்ப இந்த கஞ்சியை குடிங்க….!!
இன்றைய கால கட்டத்தில் அதிகம் இடுப்பு வலியால் பாதிக்கபடுவது பெண்களே. இந்த வலியால் பாதிக்கபடுவது பெண்களே ஆகும். இது உடலில் வைட்டமின் ஏ , வைட்டமின் சி , சத்து குறைவதும்,கால்சியம், இரும்புச்சத்து குறைவதாலும் முக்கியமாக ஏற்படுகிறது.உடலில் வாதம் அதிகரித்தால் இடுப்பு வலி ,முழங்கால் வலி ,மூட்டுவலி முதலியவை ஏற்படுகிறது. அடுத்ததாக முதுகு தண்டு வடம் வீங்குதல் ,முதுகு தண்டு வடம் வலித்தல் ,கழுத்து வலி இந்த காரணங்களால் இந்த இடுப்புவலி ஏற்படுகிறது .
இந்த வலிகள் நீங்க சிறு தானியங்களை உணவாக எடுக்க வேண்டும் .மேலும் சாமை ,திணை ,சோளம் கம்பு முதலிய இயற்கை உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் . கேழ்வரகை கூழாக காய்ச்சி வாரம் இரு முறை குடிக்க வேண்டும் .உணவில் அதிகம் கீரையை சேர்த்து கொள்ள வேண்டும் .மேலும் நாட்டு பசும் பாலை காய்ச்சி குடித்து வந்தால் இந்த பிரச்சனை படிப்படியாக குறையும் .தினமும் 10 முதல் 15 கி வரை வேர்க்கடலையை தினமும் உணவில் கொள்வதால் உடலில் வைட்டமின் சத்து குறைபாடு நீங்கும் .
தேவையான பொருட்கள் :
கசகசா -15 கி
பார்லி அரிசி -15கி
பச்சரிசி -15 கி
ஜவ்வரிசி -10கி
செய்முறை:
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 100 மி லி தண்ணீர் ஊற்ற வேண்டும்.தண்ணீர் நன்கு கொத்தித்த வுடன் அதில் கசகசா ,பார்லிஅரிசி,ஜவ்வரிசி ,பச்சரிசி முதலியவற்றை போட வேண்டும் .இவ்வா அனைத்தும் நன்கு வெந்தவுடன் இறக்கி பின்பு குடித்தால் கடுமையான இடுப்பு வலி நீங்கும் .இந்த கஞ்சியை வரம் இருமுறை குடித்தால் கடுமையான இடுப்பு வலி நீங்கி விடும்.