கொரோனா தொற்றிலிருந்து நீங்கள் பாதுகாக்கப்பட இந்த ஜூஸ் குடிங்க….!

Default Image

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய பீட்ரூட் ஸ்மூத்தி செய்வது எப்படி?

இன்று நாடெங்கும் கொரோனா வைராஸ் தீவிரமாக பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஆக்சிஜன் அளவு வெகுவாக குறைகிறது. எனவே ஆரோக்கியமான உணவை பின்பற்றி, வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியும். மேலும் இதயம் மற்றும் நுரையீரலை ஆரோக்கியமாக கவனித்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.

இந்நிலையில் நொய்டாவை சேர்ந்த உணவியல் நிபுணர் சயனிகா ஷர்மா கொரோனாவை எதிர்த்து போராட, நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்க செய்ய  பீட்ரூட் ஸ்முத்தி குடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம். இதன் மூலம் ரத்த ஓட்டம் சரியாக அமைவதுடன், ஆக்சிஜன் அளவு அதிகரிக்க உதவுகிறது.

தேவையானவை

  • பீட்ரூட் – 1
  • தக்காளி – 2
  • எலுமிச்சை – 1

செய்முறை

முதலில் ஒரு பீட்ரூட்டை சிறிய துண்டுகளாக கழுவி, சிறிய துண்டுகளாக வெட்ட வேண்டும். பின் 2 தக்காளியை எடுத்து அதனையும் சிறிய துண்டுகளாக வெட்டி பீட்ரூட் மற்றும் தக்காளி இரண்டையும் மிக்ஸியில் போட்டு நன்றாக மிருதுவாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு கிளாஸில் ஊற்றி அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கிளறவேண்டும். இப்போது சத்தான சுவையான பீட்ரூட்  ஸ்முத்தி தயார்.

நன்மைகள்

பீட்ரூட் அலர்ஜி எதிர்ப்பு பானம் மற்றும் இயற்கையாகவே இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது ஆகும். இது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு சிறந்த பானமாகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. பீட்ரூட்டில் பைபர், போலேட், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. தக்காளியில் பொட்டாசியம் வைட்டமின் பி மற்றும் ஈ மற்றும் பிற ஊட்டச் சத்துக்கள் உள்ளது. இது நமது செல்கள் சேதமடைவதிலிருந்து பாதுகாக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்