கனவுகள் நிஜமாகும் ! சாந்தனு நன்றி ட்விட் !
நடிகர் விஜய் கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில்”பிகில்” படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது. அதில் விஜயும் கலக்கலாக பேசி அசத்தினார்.
இந்த படத்தை அடுத்து விஜய் அடுத்ததாக “தளபதி 64” படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்த படத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி இணைந்தார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சாந்தனுவும் முக்கிய ரோலில் நடிக்க இருப்பதாக தற்போது ஒரு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில் “நடிகர் சாந்தனு கனவு நிஜமாகும் என்று பதிவிட்டு தளபதி விஜய்யுடன் இணைந்து மகிழ்ச்சி.இயக்குனர் லோகேஷ் கனகராஜ் , தயாரிப்பாளர் லலித் குமார் , பிரிட்டோ ,ஜெகதீஷ் மற்றும் அன்பான ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்து ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.இதோ அந்த பதிவு
https://twitter.com/imKBRshanthnu/status/1179329197115879424