ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் டாக்டர்..??
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நெட்பிளிக்ஸ் ஹாட்ஸ்டார் இரண்டு ஓடிடி நிறுவனங்களோடு டாக்டர் படத்தை வெளியீடுவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.