தமிழகத்தில் பாமக தலைமயில் ஆட்சி.! தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்.!

PMK Founder Dr Ramadoss

தமிழகத்தில் பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார் . 

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்று தனது 85வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு கட்சி தொண்டர்களுக்கு அவர் ஓர் கடிதத்தை எழுதி உள்ளார். அதில் பாமக கட்சி அரசியல் பற்றியும் அதன் எதிர்காலம் பற்றியும் பல்வேறு தகவல்களை பகிர்ந்து உள்ளார்.

அதில், எனது பிறந்தநாளில் இளையவர்களை வாழ்த்துகிறேன். முதியவர்களிடமிருந்து வாழ்த்துகளை பெறுகிறேன். என்னைப் பொறுத்தவரை ஜூலை மாதம் மிக முக்கியமான மாதம். ஜூலை 16ஆம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாள். ஜூலை 20ஆம் தேதி வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாள். ஜூலை 25ஆம் தேதி எனது பிறந்தநாள் என குறிப்பிட்டார்.

எனது அரசியல் பயணத்தில் அரசியல், சமூக நீதி, இனம், மொழி, இயற்கை என என்னென்ன இலக்குகளை அடைய வேண்டும் என்று நினைத்தேனோ அதனை இன்னும் முழுதாக என்னால் அடைய முடியவில்லை. இருப்பினும், இன்னும் சில ஆண்டுகளில் எனது இலக்குகளை எட்டி விடுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஆனால் தமிழகத்தின் ஆட்சி இலக்கை எட்டுவதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இந்த கேள்வி என்னை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் பாட்டாளிகளுக்காக உழைப்பது எனது விருப்பமும் மகிழ்ச்சியும் ஆகும். இந்த பணியை நான் என்றும் தொடர்வேன். என உறுதி அளிக்கிறேன் என தனது பிறந்தநாள் அறிக்கையில் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்