இரட்டை கொலை..! மனோகரனுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற தடை..!
கோவையில் கடந்த 2010-ம் ஆண்டு பள்ளிக்கு செல்வதற்காக காத்திருந்த 10 வயது சிறுமி மற்றும் அவரது சகோதரன் இருவரையும் அவ்வழியே காரில் வந்த இருவர் கடத்தி சென்றுள்ளனர்.
பின்னர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவர்கள் இருவரையும் தண்ணீரில் தள்ளி கொலை செய்தனர். இந்த கொலை வழக்கில் ஓட்டுநர் மோகன் மற்றும் அடுத்த நண்பன் மனோகரன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு போலீசார் அழைத்துச் சென்று கொண்டிருக்கும்போது துப்பாக்கியால் போலீசாரை அவரை சுட்டுவிட்டு மோகன் தப்பிக்க முயன்று உள்ளார். இதனால் மோகன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் மனோகரன் தூக்குத் தண்டனை விதித்தது.இதை எதிர்த்து மனோகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
ஆனால் உச்சநீதிமன்றம் மனோகரனின் மேல்முறையீடை ரத்து செய்து தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.கோவை மகளிர் நீதிமன்றம் டிசம்பர் 2-ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேறும் படி உத்தரவு விட்டு இருந்தது.இந்நிலையில் கருணை மனு அளிக்க அவகாசம் வழங்க உயர்நீதி மன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தூக்கு தண்டனை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்து உள்ளது.