இணையத்தை கலக்கும் புகைப்படம் : அமெரிக்க கடற்கரையில் கண்டறியப்பட்ட இரட்டை தலை ஆமை…!
அமெரிக்காவிலுள்ள தென் கரோலினா பகுதியிலுள்ள கடற்கரையோரத்தில் கண்டறியப்பட்ட ஆமையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா கடற்கரைப் பகுதியில் உள்ள எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் மணலில் கடலாமைகள் முட்டை இடுவது வழக்கம். இந்த பகுதியில் ஆமையின் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளி வராமல் எங்கேயும் புதைந்து கிடக்கிறதா என்பதை ஆராய்வதற்காக எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்காவின் ரோந்து படை மற்றும் தன்னார்வலர்கள் அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது மூன்று முட்டைகள் பொரிக்கப்படாத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த முட்டைகள் சிறிது நேரத்துக்குப் பின்பதாக பொரிந்து குஞ்சுகள் வெளியே வந்துள்ளது. ஆனால் அதில் இருந்து வெளியே வந்த ஒரு ஆமை குஞ்சு மட்டும் இரட்டை தலையுடன் இருந்துள்ளது. இதனை அடுத்து இந்த ஆமையின் புகைப்படத்தை எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்கா ஊழியர்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில், இது குறித்து எடிஸ்டோ பீச் ஸ்டேட் பூங்கா ஊழியர்கள் கூறுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தென் கரோலினாவின் மற்ற சில பகுதிகளிலும் இருந்து இரண்டு தலை கொண்ட கடல் ஆமைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், இந்த இரண்டு தலை கொண்ட ஆமை குஞ்சு பொரிப்பதற்கு காரணம் மரபணு மாற்றத்தின் விளைவு தான் எனவும் கூறுகின்றனர்.