பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தோன்றி இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற உள்ளதாகவும் , ஒருவர் இன்று வெளியேறுவார் என்றும் அறிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று சனிக்கிழமை என்பதால் பல பிரச்சனைகளுக்கு தீர்வை கமல் கூறுவார் என்றும்,பலரை வச்சு செய்வார் என்றும் கூறப்படுகிறது.அதனுடன் எலிமினேஷனும் நடைபெறவுள்ளது.இந்த வார நாமினேஷனில் ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ஷிவானி, ஜித்தன் ரமேஷ், சோம், நிஷா ஆகியோர் தேர்வாகியுள்ளனர் .இதில் குறைவான வாக்குகளை பெற்ற நபர் வெளியேறுவது வழக்கம் .இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இரண்டு பேர் வெளியாக உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது.
அதனை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார் . தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில், கமல்ஹாசன் தோன்றி பலமுறை சொல்லிட்டேன் , ஜோடியாக விளையாடினால் ஜோடியாக வெளியேற வேண்டியிருக்கும்,கூட்டமாக விளையாடினால் கூண்டோடு கைலாசம் தான்,ஆனால் அவர்கள் கேட்டபாடில்லை .நான் கேள்விப்பட்ட வரையில் இந்த வாரம் இரண்டு எவிக்ஷன் அதில் ஒன்றை இன்றே செய்வோம் என்று கூறுகிறார்.எனவே இந்த வாரம் நாமினேட் ஆன ஆறு போட்டியாளர்களில் யார் யார் வெளியேற்றப்படுவார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…