இனிமேல் பழைய சாதத்தை வீணாக்காதீங்க …..! இந்த மாதிரி ஒரு முறை செஞ்சு பாருங்க…!
எவ்வளவு தான் அளவாக சமைத்தாலும் அனைவர் வீட்டிலும் இரவு நேரத்தில் சாதம் மீதமாக இருப்பது வழக்கம் தான். இந்த சாதத்தை கொட்டி விடவும் மனமிருக்காது. அப்படியே வைத்தால் கெட்டு போய்விடும். இதில் பலர் புளி சாதம் செய்வார்கள். அதன் சுவை பலருக்கு பிடிக்காது. ஆனால், இன்று புது விதமாக புளி சாதம் அனைவருக்கும் பிடித்தவாறு எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்
- கடுகு
- கருவேப்பில்லை
- வேர்க்கடலை
- முந்திரி பருப்பு
- கடலைப்பருப்பு
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- மிளகாய்த்தூள்
- பெருங்காயத்தூள்
- மஞ்சள் தூள்
செய்முறை
புளி சாதம் : முதலில் இரவு நேரம் மீதமாகும் சாதத்தில் லேசாக புளியை கலந்து, அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும்.
தாளிக்க : அதன் பின் காலையில் அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நன்றாக பொரிந்ததும் 2 ஸ்பூன் வேர்க்கடலை, முந்திரி பருப்பும் சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு இதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பின் தேவையான அளவு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
சாதம் : பின் இதனுடன் சாதத்தை சேர்த்து நன்கு சாதம் சூடாகும் வரை கிளறவும். அவ்வளவு தான் அட்டகாசமான சாதம் தயார். நிச்சயம் ஒரு முறை செய்து பாருங்கள். காலை உணவுக்கு மிகவும் சுவையாக இருக்கும்.