காலையில் எழுந்ததும் இதெல்லாம் செய்யாதீங்க! இதை மட்டும் செய்ங்க!
நம்மில் பலர் காலையில் எழுந்ததும் அவசரம் அவசரமாக தங்களது வேலிகளை முடித்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி அதன்படியே நடப்பதுண்டு. எந்த காரியத்திலும் நிதானத்தோடு செயல்பட்டால் தான் வெற்றியடைய முடியும். நாம் காலையில் எழுந்தவுடனே நிதானமின்றி அவசரமாக செயல்படுவதால், பல காரியங்கள் நமக்கு தோல்வியாக தான் அமைகிறது.
நாம் செய்ய வேண்டியவை
உடற்பயிற்சி
காலையில் நேரத்தோடு மெதுவாக எழுந்து, ஐந்து நிமிடங்கள் படுக்கையில் அமர்ந்தபடியே ஆழ்ந்து மூச்சு விட்டபடி கண் மூடி தியானம் செய்யுங்கள். இது சுவாசத்துக்கு இதயத்துக்கும் நல்லது. மேலும், நம்மால் இயன்ற சிறை உடற்பயிற்சியை செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு முன் 2 குவளை தண்ணீர் அருந்த வேண்டும். அப்படி செய்தால் தான், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
நல்லதையே சிந்தியுங்கள்
காலையில் எழுந்தவுடன், இந்த நாள் நமக்கு நன்றாக அமையும். இந்த நாள் எனக்கான நாள். இந்த நாளில் நான் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவேன் என நேர்மறையான எண்ணங்களை சிந்தியுங்கள். இந்த சிந்தனை உங்களை அந்த நாள் முழுவதும் வெற்றியின் பாதையில் கொண்டு செல்லும்.
இயற்கையை ரசியுங்கள்
இயற்கை நமக்கு இறைவன் கொடுத்த வரம். இயற்கையோடு இசைந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள். எழுந்தவுடன் அதிகாலை காற்றை சுவாசியுங்கள். சூரிய ஒளி உடலில் படுமாறு நடந்து கொள்ளுங்கள். இது உடலில் வியாதிகள் வராமல் பார்த்துக் கொள்கிறது. பறவைகளின் குரலை கேளுங்கள். இது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும்.