குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருமே அதிகளவில் தற்பொழுது சாக்ஸ் பயன்படுத்துகிறார்கள். இந்த சாக்ஸை கொஞ்ச நாட்கள் தான் பயன்படுத்த முடிகிறது. பாதங்களில் அதிக நேரம் இருப்பதால் அடிக்கடி இதை மாற்ற வேண்டி உள்ளது அல்லது கிழிந்து விடுகிறது. இது போன்ற கிழிந்த சாக்ஸுகளை, பழைய சாக்ஸுகளை தூக்கி எரிந்து விடுகிறோம். ஆனால், இனி தூக்கி ஏரியாதீர்கள். கிழிந்த சாக்ஸுகளை பல விதமாக நாம் பயன்படுத்தி கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இன்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
எவ்வளவு தான் விலை கொடுத்து மாடலாக அழகாக வாங்கினாலும் எண்ணெய் டப்பாவிலுள்ள கசிவுகள் மட்டும் பலருக்கு தீராத பிரச்சனையாக இருக்கும். ஒவ்வொரு முறையும் கையிலெடுக்கும் பொழுது எண்ணெய் கைகளில் ஒட்டி கொள்ளும், சமையல் கட்டிலும் எண்ணெய் பிசுக்கு இருக்கும். ஆனால், இந்த சாக்ஸுகளை கிழிந்த பக்கத்தில் மேலும் கீழுமாக வெட்டி விட்டு, எண்ணெய் டப்பாவுக்கு உரை போல போட்டு வைத்துக்கொண்டால் எண்ணெய் கசிவு இருந்தாலும், கைகளில் எண்ணெய் படாது.
பெண்கள் கைப்பை தான் அதிகளவில் உபயோகிப்பார்கள். கைப்பையில் தனி தனி அறைகளாக பைகள் இருந்தாலும் சில்லறைகள் போட்டு வைக்க ஒரு பர்ஸ் வைத்திருப்போம். இதற்க்கு பதிலாக சாக்ஸுகளின் மேற்புற துளையிலிருந்து உருட்டி அதில் ஒரு பட்டன் போட்டு வைத்துக்கொண்டால் கைபைகளில் சில்லறைகளை போட்டு வைக்க உதவும்.
இளம் பெண்கள் வெளி இடங்களுக்கு செல்லும் பொழுது மாதவிடாய் காலங்களில் உபயோகப்படுத்தும் சானிடரி நாப்கின்கள் கடைகளில் வாங்க கூச்சப்படுவார்கள். இதற்கு பதிலாக நமது கைபைகளில் ஒரு நாப்கின் எப்பொழுதும் வைத்து கொள்வது நல்லது. இது சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதால் சாக்ஸுகளுக்குள் போட்டு வைத்து கொள்ளலாம். பாதுகாப்பாகவும் இருக்கும், பிறர் நமது பைகளை தொட்டாலும் அச்சப்பட வேண்டி இருக்காது.
குழந்தைகள் விளையாடுவதற்காக வெளியில் செல்லும் பொழுது கைகளில் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து விடுவோம். அப்பொழுது சாக்சின் மேற்புறத்தில் இருபுறமும்ப்லெஸாக துளையிட்டு சுற்றி நூல் வைத்து தைத்தால் குழந்தைகள் கையில் கொண்டு செல்லும் கைப்பை போல உபயோகப்படுத்தலாம். சைக்கிள்களில் செல்லும் குழந்தைகள் தொங்க விட்டு கொண்டு செல்லலாம்.
ஷார்ஜா : இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி…
ஜோகன்னஸ்பேர்க் : ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளரும், தற்போதைய மும்பை கேப் டவுன் அணியின் கேப்டனுமான ரஷீத் கான், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பப்படும்…
மதுரை : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல், ஈரோடு கிழக்கு மற்றும் உ.பியில் மில்கிபூர்…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர்…
டெல்லி : 70 சட்டப்பேரவைகள் கொண்ட டெல்லி மாநிலத்திற்க்கு கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு…
சென்னை : கடந்த சில நாட்களாக தொடர் உச்சம் கண்டு வந்த தங்கத்தின் விலை நேற்று எந்தவித மாற்றமும் இன்றி…