எங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்த நினைக்காதீர்கள்.!எச்சரிக்கை விடுக்கும் தாலிபான் தலைவர்.!
எங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்த நினைக்காதீர்கள். இது ஆப்கனிஸ்தான். என எச்சரிக்கை விடுக்கும் தாலிபான் தலைவர்.
தாலிபான் தலைவர் அகமது யாசிர் தனது டிவிட்டர் பக்கத்தில் 1971 போரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்ததைக் காட்டும் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அதில், பாகிஸ்தான் உள்துறை அமைச்சரே, அருமை ஐயா! சிரியாவில் உள்ள குர்துகளை குறிவைக்க ஆப்கானிஸ்தான் ஒன்றும் சிரியாவோ பாகிஸ்தானோ துருக்கியோ அல்ல. இது ஆப்கானிஸ்தான், பெருமை வாய்ந்த பேரரசுகளின் கல்லறை ஆப்கானிஸ்தான்.
எங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்த நினைக்காதீர்கள், ஒருவேளை அப்படி நடந்தால், இந்தியாவுடனான இராணுவ ஒப்பந்தம் போல திரும்பவும் ஒப்பந்தம் போடப்படும். என பதிவிட்டுள்ளார்.