“ஒரு கதை சொல்லட்டா சார்” விக்ரம் வேதா வெளியாகி 4 ஆண்டுகள்.!
விக்ரம் வேதா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள்.
கடந்த 2011ஆம் ஆண்டு இயக்குனர் புஷ்கர்- காயத்ரி ஆகியோர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மாதவன் மற்றும் இருவரும் நடித்து இருந்தனர். படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்திருந்தார். மேலும், வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், விவேக் பிரசன்னா போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
இந்த திரைப்படத்தை வை நாட் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. படத்திற்கு இசையமைப்பாளர் சாம்.சி இசையமைத்திருந்தார். சிறந்த கேக்ங் ஸ்டார் படமாக உருவாகி வெளியான இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் வெளியான முதல் வாரத்தில் மட்டும் 10 கோடியை வசூல் செய்தது. உலகம் முழுவதும் 17 கோடியை வசூல் செய்தது. ஒரு வாரத்தில் உலகம் முழுவதுமிருந்து 40 கோடியை இத்திரைப்படம் வசூலித்தது.
இந்த நிலையில், இந்த திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகளை கடந்துள்ளது. இதனால் ரசிகர்கள் ட்வீட்டரில், 4YearsOfVikramVedha என்ற ஹஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும் விக்ரம் வேதா திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது. இதையும் இயக்குனர் புஷ்கர்- காயத்ரி இயக்குகின்றார்கள். தயாரிப்பாளர் சஷிகாந்த் இந்தப் படத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.
இந்த இந்தி ரீ மேக்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி காணும் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.