‘வன்முறையை ஆதரிக்க வேண்டாம்’: ஜே.என்.யுவில் முகமூடி கும்பல் தாக்குதல் குறித்து சன்னி லியோன் கருத்து.!

Default Image
  • டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர்.
  • ஜே.என்.யூ மாணவர்கள் தாக்குதலை குறித்து சன்னி லியோன் கூறுகையில், எனக்கு வன்முறையில் நம்பிக்கையில்லை, வன்முறை இல்லாமல் தீர்வை காணவேண்டும் என நான் விரும்புகிறேன் என்றார்.

டெல்லி கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது சில மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர். அந்த தாக்குதலைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டத்திற்கு அரசியல் கட்சியினர், மாணவர்கள் மற்றும் திரைப் பிரபலங்களும் ஜே.என்.யூ மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், பாலிவுட் நட்சத்திரங்கள் அனுராக் காஷ்யப், டாப்ஸி, ஜோயா அக்தர், தியா மிர்சா உள்ளிட்ட பலர் பங்கேற்று டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற தாக்குதலை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். அதேபோல் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் ஜே.என்.யூ மாணவர்களின் போராட்டத்துக்கு நேரில் சென்று தனது ஆதரவு தெரிவித்ததார். இந்நிலையில் தற்போது, ஜே.என்.யூ தாக்குதல் சம்பவம் குறித்து நடிகை சன்னி லியோன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஜே.என்.யூ மாணவர்கள் தாக்குதலை குறித்து சன்னி லியோன் கூறுகையில், வன்முறையில் எனக்கு நம்பிக்கையில்லை, வன்முறையை ஆதரிக்காமல் தீர்வை நோக்கி நகரவேண்டும் என நான் விரும்புகிறேன். இப்போது நடைபெற்ற தாக்குதல் மாணவர்களை மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்திலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் அவர்களது பசங்கள் மீது அச்சத்தில் இருப்பார்கள், மற்றும் பாதுகாப்பு குறித்து மிகுந்த பயம் ஏற்பட்டுள்ளது. மேலும் வன்முறையை குழந்தைகள் பார்த்து கற்றுக் கொள்ளும் ஒன்று என்பதால் இதனை கைவிடுமாறு ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமின்றி இந்த பிரச்னையில், யாரையும் பாதிக்காத வகையில் ஒரு நல்ல முடிவினை கொண்டுவர வேண்டும் எனக் செய்தியாளர்களிடம் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்