நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக இருவரும் விவாகரத்து செய்துகொண்ட நிலையில், ஏ.எல்.விஜய் மற்றொருவரை திருமணம் செய்துகொண்டார். இதன்காரணமாக நடிகை அமலா பால், பாடகர் பவ்னிந்தர் சிங்கை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் என அண்மையில் தகவல்கள் வெளியானது.
மேலும் பவ்னிந்தர் சிங், தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் அவர் நிச்சியதார்தம் செய்துகொண்டதாக அதிகளவில் செய்திகள் பரவத் தொடங்கியது. இந்தநிலையில், அமலா பாலுடன் திருமண கோலத்துடன் இருக்கும் புகைப்படத்தை பவ்னிந்தர் சிங் வெளியிட்டுள்ளார். வெளியிட்ட சிறிது நிமிடங்களில் அந்த பதிவை நீக்கியது, குழப்பத்தை ஏற்படுத்தியது.
தனது அனுமதியின்றி, தங்களுக்கு திருமணம் ஆனதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டதாக பவ்னிந்தர் சிங் மீது வழக்கு தொடர அனுமதிக்ககோரி அமலாபால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்கள். இதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த காரணமாக, அமலா பால் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட பவ்னிந்தர் சிங்கிற்கு தடை விதித்து, உத்தரவிட்டுள்ளனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…